வேலூர்: ஆன்லைன் பிரச்னை உள்ள வேலைவாய்ப்பு பதிவு எண்ணுக்கு பதில் பிழைகளை களைந்து புதிய எண்களை வழங்க மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் துறைகளில் காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்புத்துறை மூலம் ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வு மதிப்பெண்ணுடன், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ஆகியவையும் பணி நியமனத்துக்கு பரிசீலிக்கப்பட்டு இறுதி நியமன பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதும், தங்களது பதிவை தொடர்ந்து புதுப்பிப்பதும் முக்கியமான தேவையாக உள்ளது, இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் சென்று அலைவதையும், தேவையற்ற பிரச்னைகளையும் தவிர்ப்பதற்கு வேலைவாய்ப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Please Comment