ஜன.6-இல் உதவி சிறை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஜன.6-இல் உதவி சிறை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் உதவி சிறை அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு வருகிற ஜன.6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 





இத்தேர்வை, தருமபுரி மாவட்டத்தில் 595 பேர் எழுதுகின்றனர். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: உதவி சிறை அலுவலர்களுக்கான போட்டித் தேர்வு அரசு தேர்வாணையத்தால் வருகிற 6-ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைகளிலும் நடத்தப்படுகிறது. தருமபுரியில் மொத்தம் 595 பேர் தேர்வெழுத உள்ளனர். தேர்வு எழுதவரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் செல்லிடப்பேசி, கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் போன்ற தகவல் பரிமாற்ற உபகரணங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. 




எனவே, அவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்தில் அச்சமின்றி தேர்வு எழுதலாம்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment