மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கூடுதல் உதவித்தொகை பெற விண்ணப்பம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கூடுதல் உதவித்தொகை பெற விண்ணப்பம்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கூடுதல் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் 2019 ஜன.3 முதல் 30 வரை நடக்கும் நடமாடும் சிகிச்சை வாகன பயிற்சி முகாம்களில் வழங்கப்படுகிறது.




சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது





1 முதல் 6 வயது வரையுள்ள மனவளர்ச்சி குன்றிய, செவித்திறன், முடக்கு வாதம் மற்றும் மூளை பாதிப்பிற்குள்ளான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு வசதி கொண்ட நடமாடும் சிகிச்சைப்பிரிவு வாகனங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நிறுத்தப்படும் இந்த சிகிச்சை வாகனங்களில் குழந்தைகளை பரிசோதித்தல், ஆரம்ப நிலை மாற்று திறனை கண்டறிதல், உதவி உபகரணங்களுக்கு மதிப்பீடு,பயிற்சி அளித்தல் போன்றவற்றுக்காக சாய்தளபாதை வசதி செய்யப்பட்டுள்ளது.அரசின் வருவாய்த்துறை மூலம் ரூ.1000 உதவித்தொகை பெறும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாற்று திறனாளிகள் நலத்துறை மூலமும் ரூ.1500 உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்களும்இப்பயிற்சி முகாமில் வழங்கப்படும்.




இம்முகாம் ஜன., 3ல் சிங்கம்புணரி, 4 ல் எஸ்.புதுார், 8 ல் சாக்கோட்டை, 9ல் தேவகோட்டை, 10ல் கண்ணங்குடி, 11 ல் சிவகங்கை, 22ல் மானாமதுரை, 23 ல் கல்லல், 24 ல் இளையான்குடி, 29 ல் காளையார்கோவில், ஜன., 30 ல் திருப்புத்துார் ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment