செய்முறை :
நடுவிரல் நுனியால் கட்டை விரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும். தரை விரிப்பின் மீது சம்மணமிட்டோ, நாற்காலியில் அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றியோ செய்யலாம். நின்றுகொண்டோ, நடந்துகொண்டோ செய்யக் கூடாது. ஒரு நாளைக்கு இரு வேளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். ஆகாய முத்திரையை ஒரு கையில் மட்டும் செய்யக் கூடாது.
காது, எலும்பு சம்பந்தப்பட்ட குறைபாடுகளை குணப்படுத்துகிறது, அத்தோடு தூக்கமின்மையையும், இதயம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துகின்றது. பயணங்களால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, ஜெட்லாக் காதுவலி, காது இரைச்சல் போன்றவற்றைத் தவிர்க்க, இதைச் செய்யலாம். பயணம் தொடங்குவதற்கு ஐந்து முதல் 10 நிமிடங்களுக்கு முன்பும் இந்த முத்திரையைச் செய்யலாம்.
வயதாகும்போது காதுகளில் கேட்கும் திறன் குறையும். கேட்கும் திறன் மேம்பட இந்த முத்திரை உதவும். பல்வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, பற்கூச்சம் ஆகியவற்றுக்கு இந்த முத்திரையைச் செய்யலாம்.
No comments:
Post a Comment
Please Comment