அசத்தல்! கிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் வசதி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அசத்தல்! கிராமங்களில் அதிகரிக்கிறது இன்டர்நெட் வசதி

கிராமப் புறங்களில், 'இன்டர்நெட்' எனப்படும் இணைய பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 'கேபிள் டிவி' மூலம், விரைவில், இன்டர்நெட் சேவை அளிக்க, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் திட்டமிட்டுள்ளன.




கடந்த, 2011 மக்கள் தொகை கணக்குப்படி, நம் நாட்டில், கிராமப்புறங்களில், 91.8 கோடி பேர் வாழ்கின்றனர். இவர்களில், 18.6 கோடி பேர் மட்டுமே, இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இந்த எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து, கிராமங்களில், இன்டர்நெட் பயன்பாட்டை பரவ லாக்க, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும், 'டிராய்' அமைப்பும் திட்டமிட்டுள்ளன. இதன்படி, கிராமங்களில் தற்போது வழங்கப்படும், 'கேபிள் டிவி' சேவை மூலம், 'பிராட்பேண்ட் இன்டர்நெட்' சேவை வழங்க, திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: கிராமப்புறங்களில், 10 கோடி வீடுகளில், 'கேபிள் டிவி' மூலம் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன. 'கேபிள் டிவி' மூலம், அதிவேக இன்டர்நெட் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.'டிராய்' தலைவர், ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: 






உலகளவில், கேபிள் இணைப்பு மூலம், சராசரியாக, 46 சதவீத வீடுகளுக்கு, இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இந்தியாவில், இது, 7 சதவீதமாக மட்டுமே உள்ளது. இந்த விகிதத்தை கணிசமாக உயர்த்தும் நோக்கில், கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு, 'கேபிள் டிவி' மூலம், இன்டர்நெட் சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அதிகாரிகள், 'டிராய்' அதிகாரிகள், இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், டிசம்பரில் நடந்தது. அப்போது, 'கேபிள் டிவி' மூலம் இன்டர்நெட் சேவை அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.






 இதே போன்ற சேவை அளிக்கும் திட்டம், ஆசிய நாடான, தென் கொரியாவில், வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.@block@எவ்வாறு செயல்படும்? மத்திய அரசின் திட்டப்படி, 'கேபிள் டிவி' சேவையுடன், இன்டர்நெட் சேவையை சேர்த்து வழங்க, புதிய, 'செட் - டாப் பாக்ஸ்' பொருத்தப்பட வேண்டும். இதற்கான தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு வசதிகளை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின், இன்ஜினியரிங் பிரிவான, பி.இ.சி.ஐ.எல்., வழங்கும்.block@block@83 கோடியாக அதிகரிக்கும்! மத்திய அரசு, டிஜிட்டல் பயன்பாடு மற்றும் சேவைகளை அதிகரிக்க, பல்வேறு திட்டங்களை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. 







இதனால், கடந்த சில ஆண்டுகளாக, இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 'வரும், 2021ல், இந்தியாவில், இன்டர்நெட் பயன்படுத்துவோர், 59 சதவீதமாக, அதாவது, 82.9 கோடி பேராக அதிகரிப்பர்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2016ல், இந்த எண்ணிக்கை, 37.3 கோடி மட்டுமே துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment