குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லக் கூடாது : பெற்றோருக்கு நீதிபதி அறிவுரை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லக் கூடாது : பெற்றோருக்கு நீதிபதி அறிவுரை

பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பேசிய நீதிபதி து.செல்வநாதன், குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுச் செல்லக் கூடாது என்று பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.







 திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன மேலாளர் ஸ்டீபன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை நீதிபதி து.செல்வநாதன் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசியது: குழந்தைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்க வேண்டும். அதேபோல், பெற்றோர் தங்கள் குழந்தைகளை வீடுகளில் தனியாக விட்டு விட்டுச் செல்லக்கூடாது. எப்போதுமே குழந்தைகளின் பாதுகாப்புக்கு குடும்பத்தினர் முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றார். 




 இந்த நிகழ்ச்சியில், மூத்த குடிமையியல் நீதிபதி ஜி.சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலர் குமாரசாமி, வட்டாரக் கல்வி அலுவலர் ரங்கன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தயாசாந்தி, தேசிய சுகாதாரத் திட்ட மருத்துவர் ஜெயராஜ், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் இளங்கோவன், துணை வட்டாட்சியர் வெண்ணிலா, வழக்குரைஞர் பத்மினி ஆகியோர் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி நீதிபதியிடம் மனுக்களை அளித்தனர்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள். நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment