உலகிலேயே வேத கணித முறை எளிதானது! சீனாவில் விருது பெற்ற தமிழக ஆசிரியர் பேட்டி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகிலேயே வேத கணித முறை எளிதானது! சீனாவில் விருது பெற்ற தமிழக ஆசிரியர் பேட்டி

உலகிலுள்ள கணித முறைகளில், வேத கணிதம் எளிதாகவும், விரைவாகவும் விடை காண முடியும்,'' என, சீனாவில் பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த கணித ஆசிரியர் ஐசக் தேவகுமார் கூறினார்.ஈரோடு மாவட்டம், கிருஷ்ணபாளையத்தைச்சேர்ந்தவர் ஐசக் தேவகுமார். 





சீனா நாட்டிலுள்ள, சிஸ்வான் மாகாணம், செங்குடு நகரிலுள்ள அரசுப்பள்ளியில், மூன்றரை ஆண்டுகளாக முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நமது வேத கணித முறையில், அங்கு பாடம் நடத்தி, இரு முறை, சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றுள்ளார்.உடுமலை கல்லுாரிக்கு வந்திருந்த ஐசக் தேவகுமார் அளித்த பேட்டி:ரிக், யஜூர், சாம, அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன. 




அதில், அதர்வண வேதம், அறிவியல், கணிதம், வானவியல் என அனைத்து அறிவு சார்ந்த விஷயங்களை குறிப்பிடுகிறது.சமஸ்கிருத மொழியில் இருந்ததை, மகராஜ சங்கராச்சாரியார் மொழி பெயர்த்து, 16 சூத்திரங்கள், 14 உப சூத்திரங்களை கண்டறிந்துள்ளார்.எளிமையாகவும், விரைவாகவும் விடையளிக்கும் முறை, அதர்வண வேதத்தில் உள்ளது. 



கால்குலேட்டர், கம்ப்யூட்டரை விட அதி வேகமாகவும், எளிதாகவும், வேத கணிதத்தில் விடை காண முடியும். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. எவ்வளவு பெரிய கணக்கிற்கும், ஒரு நொடியில் விடையளிக்க முடியும்.பல 'ஸ்டெப்' மூலம் விடை கண்டுபிடிக்கும் முறை தற்போது உள்ளது. வேத கணிதத்தில், ஒரே 'ஸ்டெப்'பில், பேப்பர், பேனா இல்லாமல் கூட விடை காண முடியும்.வேத கணிதம் மூலம், உலக அளவில், இந்திய வேதங்களும், நமது முன்னோர்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது. 




நமது பாரம்பரிய வேத கணித முறையை, நமது பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும். அப்போது போட்டித்தேர்வுகளில் மிக எளிதாக சாதிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment