மாணவர்களின் நலனைக் கருத் தில்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடி யாக பணிக்கு திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
“தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ நடத்திவரும் போராட்டத்தில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ள தால் 12-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
எனவே இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நடந்த விவாதம் வருமாறு:
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி: ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஒட்டு மொத்த ஆசிரியர்களும் பங்கேற் றுள்ளதால் வகுப்புகள் நடை பெறவில்லை. செய்முறைத் தேர்வு கள் வரும் பிப்ரவரி மாதத்திலும், பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தி லும் தொடங்கவுள்ளது. மாணவர் களின் நலனைக் கருத்தில் கொள்ளா மல் தேர்வு நேரத்தில் ஆசிரியர் கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்: இந்தப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.
தலைமை வழக்கறிஞர்: ஜாக்டோ ஜியோ போராட்டத் தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக் கைகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த போராட்டத் தால் மாணவர்களின் நலன் ஒரு போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தீர்க்கமாக உள்ளது. தொடர்ந்து பணிக்கு வராத ஆசிரி யர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது.
ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் என்ஜிஆர் பிரசாத்: அரசு ஊழியர்களும், ஆசிரியர் களும் ஒரேநாள் இரவில் போராட்டத்தில் குதிக்கவில்லை. இந்த அரசிடம் எதையும் போராடித் தான் பெற வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு அளித்துள்ள உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை. தற்போது எங்களை மட்டுமின்றி நீதிமன்றத் தையும் இந்த அரசு ஏமாற்றுகிறது. பங்களிப்பு ஓய்வூதிய முறையை நீக்க வேண்டும் என்பது உள் ளிட்ட எங்களின் எந்த கோரிக்கை களையும் அரசு பரிசீலிக்கவில்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘‘மாணவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட் டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்.
அல்லது ஜன.25-க்குள் (நாளை) பணிக்கு திரும்ப வேண்டும். அதேநேரம் அரசும் அவர்களை போரட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளக்கூடாது’ என உத்தரவிட்டு விசாரணையை ஜன.28-க்கு தள்ளிவைத்தனர்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment