இந்தோ திபெத் எல்லை காவல் படையில் (ஐடிபிபி) பணிபுரியும் அபர்ணா குமார், அண்டார்டிகாவில் உள்ள தென் துருவத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2002-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில பிரிவிலிருந்து ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர் அபர்ணா குமார் (44). இந்தோ திபெத் எல்லை காவல் படையில் டிஐஜியாக பணிபுரிந்து வரும் இவர், 8 நாள் பயணத்துக்குப் பிறகு கடந்த 13-ம் தேதி அண்டார்டிகா கண்டத்தில் உள்ள தென் துருவத்தை அடைந்தார்.
இதன்மூலம் இந்த சிகரத்தை அடைந்த முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற சாதனை படைத்துள்ளார்.
இவருடன் 7 பேர் கொண்ட குழு சென்றது. 111 மைல் தூரம் இவர்கள் நடந்துள்ளனர்.
இதையடுத்து, அபர்ணா குமார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபாவை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.
அப்போது, கடந்த 6 ஆண்டுகளாக மலை ஏற்றத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட சவால்களை பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அபர்ணா செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த 2014-ம் ஆண்டு மலை யேற்ற பயிற்சியை முடித்தேன்.
அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை கடும் குளிர் நிலவும் (மைனஸ் 37 டிகிரி) தென் துருவத்தில் ஏறுவது மிகவும் கடினமாகவும் சவாலானதாகவும் இருந்தது. இதன்மூலம் 6 கண்டங்களில் உள்ள புகழ்பெற்ற சிகரங்களில் ஏறிவிட்டேன். 7-வதாக இந்த ஆண்டு வட அமெரிக்காவின் தினாலி சிகரத்தை அடைய திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
சாதனைப் படைத்த அபர்ணா குமார் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. - பிடிஐ
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment