இரு நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் யார்? இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் யார்? இயற்பியலில் யாராவது இரண்டு நோபல் பரிசுகள் வாங்கியிருக்கிறார்களா, - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இரு நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் யார்? இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள் யார்? இயற்பியலில் யாராவது இரண்டு நோபல் பரிசுகள் வாங்கியிருக்கிறார்களா,

இதுவரை 4 விஞ்ஞானிகள் இரண்டு முறை நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள், . 2 முறை நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் போலந்து நாட்டைச் சேர்ந்த, பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி. 1903-ம் ஆண்டு இயற்பியலுக்கு ஹென்றி பெக்யூரல், பியரி க்யூரியோடு சேர்ந்து இந்தப் பரிசைப் பெற்றார் மேரி. 1911-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். 







அதிக நோபல் பரிசுகளைப் பெற்ற குடும்பமும் இவருடையதுதான். இவரது மகள் ஐரின் க்யூரியும் அவரது கணவரும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்க விஞ்ஞானி ஜான் பார்டீன் 1956, 1972-ம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார். இயற்பியல் துறையில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே நபர் இவரே. லைனஸ் பாலிங் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1954-ம் ஆண்டு வேதியியலுக்கும் 1962-ம் ஆண்டு அமைதிக்கும் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். 






இங்கிலாந்தைச் சேர்ந்த பிரெட்ரிக் சாங்கர் 1958-ம் ஆண்டும் 1980-ம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசுகளைப் பெற்றார். வேதியியலில் இரு முறை நோபல் பரிசுகளைப் பெற்றவர் இவர் ஒருவரே.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment