புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய திட்டதை கொண்டுவரவேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது நாளாக இந்த போராட்டம் தொடர்வதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
மாணவர்களின் நலனுக்காக பல இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுபள்ளிகளிலும் ஆசிரியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பல பள்ளிகளில் மாணவர்களே ஆசிரியர்களாக மாறி வகுப்புகளை எடுத்தனர்.
இதுகுறித்து மாணவர்களிடம் கேட்கையில், மாணவர்கள் நாங்கள் உயரிய பதவியை பெறுகிறோம்.
ஆனால் எங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் அதே நிலையில்தான் உள்ளனர். அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை.
போராட்டத்திற்கு போனாலும் எங்கள் ஆசிரியர் எப்படி கற்க வேண்டும். கற்பிக்க வேண்டும் என்பதை வழிகாட்டித்தான் சென்றுள்ளார்.
அந்த வழிகாட்டுதல் அடிப்படையில் மாணவர்கள் நாங்களே ஆசிரியாக மாறி கற்றும் கற்பித்துக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தனர்.
இச்செயல் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment