சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு

கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.) தேர்வு முடிவை இந்திய கணக்குத் தணிக்கையாளர் நிறுவனம் (ஐசிஏஐ) வியாழக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: இறுதித் தேர்வு (பழைய பாடத் திட்டம்): சி.ஏ. பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2018 நவம்பரில் நடத்தப்பட்ட இறுதித் தேர்வை 90,802 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். 





இவர்களில் 13,909 பேர் தேர்ச்சி பெற்று, சி.ஏ. தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் கோடாவைத் சேர்ந்த ஷாதப் ஹூசைன் என்ற மாணவர் 800-க்கு 597 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதல் மாணவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குஜராத் மாநிலம் கோடேவைச் சேர்ந்த சாஹித் ஹூசென் ஷோகெட் மேமன் 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மேற்கு வங்கம் புருலியாவைச் சேர்ந்த ரிஷப் ஷர்மா 575 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இறுதித் தேர்வு (புதிய பாடத் திட்டம்): சி.ஏ. புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இறுதித் தேர்வில் 13,563 பேர் எழுதி, 1060 பேர் தேர்ச்சி பெற்று சி.ஏ. தகுதி பெற்றுள்ளனர். இதில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்த சித்தாந்த் பண்டாரி 800-க்கு 555 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதல் மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடிப்படைத் தேர்வு: 



கணக்குத் தணிக்கையாளர் அடிப்படைத் தேர்வை 48,702 பேர் எழுதினர். இதில் 21,488 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் மத்தியப் பிரதேசம் தேவாûஸச் சேர்ந்த கரித் ஜெயின் என்ற மாணவர் 400-க்கு 374 பெற்றும் முதலிடமும், ஹரியாணா ஃபரிதாபாதைச் சேர்ந்த ஸிதிஜ் மிட்டல் 370 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மிருதாஞ்சயன் ரவிச்சந்திரன், சத்தீஸ்கர் பிலாய் பகுதியைச் சேர்ந்த ஹர்திக் காந்தி, மஹாராஷ்டிரம் ஜால்கோனைச் சேர்ந்த சௌமியா கிரிராஜ் ஜெயா ஆகியோர் 368 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர்.



சிபிடி தேர்வு: பொது தகுதித் தேர்வை (சிபிடி) 25,037 பேர் எழுதியிருந்தனர் இதில் 9,038 பேர் தகுதி பெற்றுள்ளனர்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment