எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பது கட்டாயமாக்கப்படுகிறதா?

இந்தியா முழுவதும் பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி கற்பதை கட்டாயமாக்கும் வகையிலான பரிந்துரை மத்திய மனிதவள மேம்பட்டுத்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. 





இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தேவையான பரிந்துரைகளை அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் சமர்பித்திருந்தது. 






இந்நிலையில், அந்த அறிக்கையில், இந்தியாவிலுள்ள பள்ளிகளில் எட்டாம் வகுப்புவரை இந்தி மொழிப்பாடத்தை கட்டாயமாக்குவது, அறிவியல், கணிதம் போன்ற படங்களுக்கு நாடுமுழுவதும் ஒரேமாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது, திறன் மேம்பாடு சார்ந்த படிப்புகளை வழங்குதல், கல்விக்கென பிரதமர் தலைமையிலான குழு ஒன்றை உருவாக்குதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுதுளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment