கின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் காரைக்குடி விவசாயி : உருண்டை, கோபுரம் வடிவிலும் எழுதுகிறார் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கின்னஸ் சாதனைக்காக கடிதம் எழுதும் காரைக்குடி விவசாயி : உருண்டை, கோபுரம் வடிவிலும் எழுதுகிறார்

காரைக்குடி: காரைக்குடியை சேர்ந்த விவசாயி ஒருவர் கடிதம் எழுதுவதில் கின்னஸ் சாதனை படைக்க தயாராகி வருகிறார். 




சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் பெருமாள்(49). ஐந்தாம் வகுப்பு படித்தபோது, இவரது எழுத்துக்கள் மிகவும் அழகாக இருந்தது. சரியாக வாய் பேச இயலாத காரணத்தால் தான் சொல்ல வந்த கருத்துக்களை எழுதியே காட்டினார். இதனால் இவரது எழுத்துதிறன் வளர்ந்தது. பின்னர் சில காரணங்களால் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. தற்போது விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தனது எழுத்து அழகாக இருப்பதால் கடிதம் எழுதுவதில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என சின்னபெருமாள் முடிவு செய்தார். கடந்த 2018 தை 1ம் தேதி முதல் கடிதம் எழுத தொடங்கினார். தமிழக முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கும் அழகிய தமிழில் தனது கைப்பட கடிதம் எழுதி வருகிறார். 





சாதாரண நடையில் மட்டுமின்றி, உருண்டை வடிவம், கோபுர வடிவம், தேர் வடிவம் என புதுப்புது முறைகளில் கடிதம் எழுதி அசத்துகிறார். 2018ல் மட்டும் சுமார் 600 கடிதங்களை எழுதியுள்ளார். அதற்கான நகல்களையும் சேமித்து வைத்துள்ளார். சின்னபெருமாள் கூறுகையில், ‘‘கடிதம் எழுதும் முறையை வருங்கால சந்ததிக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிப்சின் 16,000 கடிதங்கள் எழுதியதே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நான் தற்போது இந்த ஆண்டு செப்.1ம் தேதி உலக கடித தினத்தன்று 2019 கடிதங்களை எழுதி முடிக்க முடிவு செய்துள்ளேன். விரைவில் 20 ஆயிரம் கையெழுத்து பிரதிகளை முடித்து கின்னஸ் சாதனைக்கு அனுப்ப உள்ளேன். 






தற்போது நான் திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் எழுத்து பயிற்சி ஆசிரியராகவும் பணி புரிந்து வருகிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஒவ்வொரு தமிழ் புத்தகங்களையும், கட்டுரைகளையும் எழுத்துக்களையும் படித்த ஆர்வத்தினால் மற்ற மொழிகளை காட்டிலும் தமிழில் எனக்கு அதிக ஈடுபாடு உள்ளது’’ என தெரிவித்தார்.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment