குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்பு தொடக்கம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் சிறப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான சிறப்பு கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது. 




இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் முறைப்படி பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லாத, இடைநின்ற, இடம்பெயரும் தொழிலாளர் குழந்தைகள், சிறப்பு குழந்தைகள் ஆகியோரை கண்டறிவதற்காக மூன்று கட்டமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக குடியிருப்பு வாரியாக கணக்கெடுப்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டது. 




அதில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் பள்ளிகளில் அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று வருகின்றனர். இரண்டாவது கட்டமாக அக்டோபர் மாதத்தில் கணக்கெடுப்பு சரிபார்த்தல் பணிகள் நடைபெற்றது. மூன்றாம் கட்ட கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கணக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு எந்தெந்த ஒன்றியங்களில் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் வருவதற்கு சாத்தியக்கூறு உள்ளது என்பதை பட்டியலிட்டு அந்த பகுதியில் மட்டும் கணக்கெடுப்பு நடத்தினால் போதும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




 இதனையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன் ஆகியோர் வழிகாட்டுதல்படி நேற்று கன்னியாகுமரியில் மகாதானபுரம் பகுதிகள், குழித்துறை ரயில்நிலையத்தையொட்டிய மேல்புறம் உள்ளிட்ட பகுதிகள், வில்லுக்குறி பகுதிகள், இனயம் கடற்கரை பகுதிகள் ஆகியன வெளிமாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகை தந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த பகுதிகளில் ஆசிரியர் பயிற்றுநர், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். 






மேலும் பள்ளிகளில் நீண்டநாட்கள் வருகை தராமல் இருக்கின்ற மாணவர்களின் விபரங்களை சேகரித்தும் அந்த மாணவர்கள் சார்ந்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. Tags: குமரிதுளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!

No comments:

Post a Comment

Please Comment