அடையாளத்துக்காகத்தானே நமக்கெல்லாம் பெயர் வைக்கப்படுகிறது. அதேபோல்தான் புயல்களுக்கும் பெயர் வைக்கிறார்கள்,
ஆரம்பத்தில் எண்களைக் குறிப்பிட்டுதான் புயல்களை அடையாளம் கண்டனர். அதில் குழப்பம் ஏற்பட்டதால், பெயர் சூட்ட ஆரம்பித்தனர். 2018-ம் ஆண்டு ஏற்பட்ட புயல் என்பதைவிட, கஜா புயல் என்று சொல்லும்போது அந்தப் புயலின் தன்மை, பாதிப்பு எல்லாம் நம் நினைவுக்கு எளிதில் வந்துவிடுகின்றன அல்லவா, அதற்காகத்தான் பெயர் வைக்கிறார்கள். வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் 2000-வது ஆண்டிலிருந்து தொடங்கியது. டெல்லியில் உள்ள உலக வானிலை அமைப்பின் மண்டலச் சிறப்பு வானிலை ஆய்வு மையம், 2004-ம் ஆண்டிலிருந்து புயல்களுக்குப் பெயர் வைக்க, 64 பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள வங்கதேசம், இந்தியா, மியான்மர், மாலத்தீவுகள், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் பெயர்களை வழங்கியிருக்கின்றன. இந்தப் பெயர்ப் பட்டியலின் வரிசைப்படி ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைக்கப்படுகிறது. வர்தா புயலுக்குப் பாகிஸ்தான் பெயரும் கஜா புயலுக்கு இலங்கைப் பெயரும் இப்படி வந்தவைதான். அக்னி, ஆகாஷ், பிஜ்லி, ஜல், லெஹர் போன்ற இந்தியப் பெயர்கள் ஏற்கெனவே வைக்கப்பட்டுவிட்டன.
தனிக் கண்டமாகவும் மிகப் பெரிய நாடாகவும் இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், மற்ற நாடுகளுடன் பெயர் பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், தானே பெயர் வைத்துக்கொள்கிறது
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment