சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளில் நியமிக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்  - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மழலையர் பள்ளிகளில் நியமிக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர் களை அரசு மழலையர் பள்ளி களில் நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 






அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதைத் தடுக்கும் வகையிலும், மாணவர் சேர்க்கையை அதிகரிக் கும் வகையிலும் அங்கன் வாடிகளில் மழலையர் பள்ளி களை தொடங்க தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. முதல்கட்ட மாக 2,381 அங்கன்வாடி மையங் களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 





 அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த உதவும் என்பதால் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும். அதே நேரத்தில், மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களாக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்புதான் கவலை அளிக்கிறது. மழலையர் வகுப்பு களுக்கும், இடைநிலை வகுப்பு களுக்கும் பாடம் கற்பிக்கும் முறை முற்றிலும் மாறுபட்டதாகும். மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்து விட்டு, அதற்காக இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பொருத்தமற்றதாகும். 




இத்தா லியைச் சேர்ந்த மரியா மாண்டிசோரி என்ற மருத்துவர்தான் குழந்தைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கினார். ‘கல்வி என்பது, ஒரு தனி மனிதன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இயற்கை செயல்பாடு. ஐம்புலன் கள் வழியாகவும் சுற்றுச்சூழலை அனுபவமாக உணரும்போதுதான், கற்கும் செயல்பாடு சாத்தியமாகும்’ என்பதுதான் மாண்டிசோரி கல்வி முறையின் அடிப்படை ஆகும். மழலையர் வகுப்புகளை நடத்துவதில் சென்னை மாநகராட்சி முன்னோடியாக திகழ்கிறது. 




எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகை யில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment