ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: உண்மையான காரணம் என்ன? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: உண்மையான காரணம் என்ன?

தமிழகத்தில் கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும். 



ஒரே பிரிவில் இருக்கும் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும். 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களை மூடக்கூடாது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, இன்று தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேலானோரரை கைது செய்துள்ளது. ஆனால் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 



 ஒருபுறம் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை சிலர் விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு எதற்கு இவ்வளவு அதிகமான சம்பளம். இவர்கள் போராட்டம் நடத்தினால் மாணவர்களின் நிலை என்னாவது? இவங்களுக்குக் கொடுக்குற சம்பளம் போதாதா? இவர்களுக்கு சம்பள உயர்வு மட்டும்தான் பிரச்சினையா? ஆசிரியர்கள் எப்பொழுதாவது மாணவர்களின் நலனுக்காகப் போராடியிருக்கிறார்களா? போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மறுபுறத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பல முறை அரசிடம் தங்கள் கோரிக்களை வலியுறுத்தி பேச்சுவாரத்தை நடத்தி உள்ளோம். ஆனால் அவர்கள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு அரசு ஊழியன் தன் சம்பளத்தில் பிடித்தம் செய்த பத்து சதம் பணம் என்னாச்சுனு கேட்டால் பதில் இல்லை. 




சுமார் 17 வருடத்தில் உயிரிழந்துள்ள ஊழியர்களின் குடும்பத்தக்கு ஒரு ரூபாய் கூட அரசு வழங்கவில்லை. அவர்களின் குடும்பத்தின் கண்ணீர் அரசு தெரியவில்லையா? மாணவர்கள குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடுகிறார்கள். ஒரு 3 பேர் மட்டுமே இருக்கிறார்கள். மற்ற மாணவர்கள வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். அங்கு பள்ளிகூடம் இருக்கிறது என்பதால் தான் அந்த மூன்று பெரும் வருகிறார்கள். அப்படி அங்கு பள்ளிகளை மூடினால், அந்த மூன்று பெரும் எப்படி பள்ளிக்கு வருவார்கள்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இதையெல்லாம் அரசு சிந்திப்பதாக தெரியவில்லை. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளிகளுக்கும், ஆரம்பப்பள்ளிகளுக்கும் பணியிறக்கம் செய்கிறார்கள், இது தவறில்லையா? 


ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கும் போதெல்லாம் சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது என்று மிரட்டுகிறார்கள். ஆனால் ஊடகம் மூலம், அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக மட்டும் தான் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற பிம்பத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது என போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஒரு ஆசிரியர் தங்கள் நிலையை கூறினார். 




கோரிக்கையாக முன்வைப்பதில் என்ன தவறு இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பினார். இதுக்குறித்து அரசு தரப்பில் கேட்டபோது, சரியான காரணம் கூறப்படவில்லை. இந்த போராட்டம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் கூறமுடியாது என்றும், அரசுக்கு மாணவர்களின் நலன் தான் முக்கியம். அதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஜக்டோ ஜியோ போராட்டம் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Please Comment