தமிழக அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பள்ளி மாணவர்களிடம் ஒழுக்கத்தை பேணி பாதுகாக்க, நீதி போதனை வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எல்கேஜி பாடத்திட்டத்திற்கு தேவையான ஆசிரியர்கள் வருகிற 21 தேதிக்குள் நியமிக்கப்படுவார்கள்.
மாணவர்களின் ஒழுக்கம் கற்பிக்க நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஈரோடு ஏஇடி பள்ளி மைதானத்தில் வரும் 19 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது;
இதனை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கல்வி தொலைக்காட்சி மூலம் பெற்றோர்களுக்கு, குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முலம் பாடம் எடுக்கப்படும்.
இவ்வாறு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment