மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, நீட் தேர்வு முடிவுகள், இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது. நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., எம்.எஸ், போன்ற பட்ட மேற்படிப்புக்கு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. 






நீட் தேர்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழகத்தில் மட்டும், 2,500 இடங்கள் உள்ளன. 2019 - 20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும், பல நகரங்களில், ஜனவரி 6 ஆம் தேதி நடந்தது. அந்த தேர்வை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். 





 இதற்கான தேர்வு முடிவுகள், தேசிய தேர்வு வாரிய அதிகாரபூர்வ இணையதளமான www.natboard.edu.in என்ற, இணையதளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment