தமிழகத்திலே முதன் முறையாக , மதுரை மாநகராட்சி பள்ளியில் தான் அறிமுகம்.! இனி மாணவர்களின் கல்வி அறிவு வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் தான்.! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தமிழகத்திலே முதன் முறையாக , மதுரை மாநகராட்சி பள்ளியில் தான் அறிமுகம்.! இனி மாணவர்களின் கல்வி அறிவு வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் தான்.!

இன்றைய விஞ்ஞான யுகத்தில், ரோபோக்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மாறி வரும் தொழில் நுட்பம், மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருவதற்கு கூட, தற்போது ரோபோக்கள் வந்து விட்டன. 






 தமிழகத்திலே, முதல் முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியான திரு.வி.க. மேல் நிலைப் பள்ளியில், நவீன ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறக்கப் பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியுடன், அமெரிக்கன் இந்தியா நிறுவனம் இணைந்து 13.50 லட்சம் செலவில் இந்த ஆய்வகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வகம் தற்போது இந்தப் பள்ளியில் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. 




 10 ரோபோக்கள், அவற்றை கட்டளையிட்டு இயக்கக் கூடிய 10 லேப் டாப்கள் உள்ளிட்ட, உட் கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ஆய்வகம் செயல்படத் துவங்கி உள்ளது. 6 முதல் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இந்த ரோபோக்கள் மூலம், அறிவியல் தொழில் நுட்பம், கணிதம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப் படும். ஒரு கணித வரைபடம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த மாதிரியான வடிவம் பெறும், போன்ற அரிய, அதிசய தகவல்களைத் தருகிறது இந்த ரோபோக்கள். 



இந்த ரோபோக்களின் மூலம், 100 மாணவர்களுக்கு, ஒரே நேரத்தில், கணிதம் மற்றும் தொழில் நுட்பப் பாடங்களைக் கற்றுத் தர இயலும். இதற்கென பயிற்சி பெற்ற ஆசிரியரும் நியமிக்கப் பட்டுள்ளார். மாணவர்கள், இந்த ரோபோட்டின் பயன்பாட்டினை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறார்கள். இனி எதிர் காலத்தில், பள்ளி மாணவர்களின் அறிவு வளர்ச்சி, ராக்கெட் வேகத்தில் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை!




🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment