திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

திருவள்ளுவர் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. வேலூர் திருவள்ளுவர் பல்கலை கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில், 130 கல்லூரிகள் உள்ளன. 




இங்கு, 38 இளங்கலை, 24 முதுகலை பாடப்பிரிவில் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கான தேர்வுகள், கடந்தாண்டு, நவ., 13ல் துவங்கி, டிச., 17ல் முடிந்தது. விடைத்தாள்கள் திருத்தும் பணி எட்டு மையங்களில் நடந்தது. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செந்தில்குமார், நேற்று மாலை, முடிவுகளை வெளியிட்ட பின் கூறியதாவது: தமிழகத்திலேயே, திருவள்ளுவர் பல்கலையில் மட்டும் தான், பத்தாவது முறையாக, தேர்வு பணிகள் அனைத்தும் முழுமையாக கணினி மூலம் நடத்தப்படுகின்றன. 




இளநிலை தேர்வு, ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 314 பேரும், முதுநிலை தேர்வு, 14 ஆயிரத்து, 532 பேரும் ஆன்லைனில் பதிவு செய்து, தேர்வு எழுதினர். இதில், இளநிலை பாடப்பிரிவில், 44, முதுநிலையில், 58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், இளநிலையில், 902, முதுநிலையில், 618 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மதிப்பெண் பட்டியல், பிப்., மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். வரும், 9ல், மாலை 5;45 மணிக்குள், கல்லூரி முதல்வர் வழியாக, ஆன்லைனில் மறுமதிப்பீட்டுக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். பல்கலை துணைவேந்தர் முருகன், பதிவாளர் பெருவழுதி பங்கேற்றனர்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment