பின்லாந்து நாட்டில் தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளதாக அங்கு சுற்றுலா சென்றுவந்த தமிழக மாணவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் சிறந்து விளங்கிய 50 மாணவ, மாணவிகள் கடந்த 21-ஆம் தேதி பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப் பயணம் மேற்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது.
இந்நிலையில் பயணத்தை முடித்து திரும்பிய மாணவர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.
இதில் மாணவிகள் வி.வி.கௌசல்யா, சங்கமித்ரா, மாணவர் பிரவீண் உள்ளிட்டோர் பேசியது: பின்லாந்து தமிழ்ச் சங்கத்தினர் எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தனர்.
பின்லாந்தில் அனைத்துச் சாலைகளும் மிகவும் தூய்மையாக இருந்தன.
அதில் செல்லும் எந்த வாகனங்களும் ஒலி எழுப்பவில்லை. மாறாக வேகமாக செல்லும் வாகனங்கள் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து அபராதத் தொகையைப் பிடித்துக் கொள்கின்றனர்.
தனியார் பள்ளிகள் இல்லை: பின்லாந்தில் அரசுப் பள்ளிகள் மட்டுமே உள்ளன; தனியார் பள்ளிகள் எங்குமில்லை. குழந்தைகள் 7 வயதில்தான் முதல் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படுகிறது. ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது.
மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது. வகுப்பில் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாடத் திட்டத்தில் 50 சதவீத அளவுக்கு மீன்பிடித்தல், கைவினைப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்தல் செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தாய்மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பின்லாந்தில் நாங்கள் கற்ற விஷயங்களை எங்களது பள்ளியில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்வோம் என்றனர்.
இதில் பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குநர் நாகராஜ முருகன்,
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, கல்விப் பயண வழிகாட்டி ஆசிரியர்கள் கலைவாணி, சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment