கன்னியாக்குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பில் சீர்கொண்டு செல்லும் விழா நடைபெற்றது. அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் நலன்கருதி அவர்களுக்கு தேவையான பொருட்களை பெற்றோர்களே கொண்டு கொடுக்கும் நிகழ்ச்சி மணவாளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழா நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.பி.அன்பு கண்ணன் தலைமை தாங்கினார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை ஸ்ரீஜா முன்னிலை வகுத்தார். தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி நடராஜன், தக்கலை கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் ஐயப்பன், தக்கலை கல்வி மாவட்டபெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரத்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லீனஸ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பீர்முகமது, விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான எழுது பொருள்கள், அழிப்பான்கள், அனைத்து வகுப்பறைகளுக்கு தண்ணீர் குடிக்க பயன்படும் எவர் சில்வர் பாத்திரங்கள். விளையாட்டு உபகரணங்கள், நோட் புத்தகங்கள், ஸ்டீல் சேஜை உள்பட ஏராளமான உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment