தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி பயின்றிட ஏதுவாக, அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இலவச பஸ் பயண அட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 1,791 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில், 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும் பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.
அதுவரையில் பள்ளி மாணவர்கள் சீருடையிலும், கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை மூலமாகவும் பேருந்தில் பயணம் செய்திட அனுமதிக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment