மாணவர்களின் ஆங்கில திறன் பரிசோதிக்க முன்னறி தேர்வு
கோவை:தமிழகம் முழுக்க, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் ஆங்கிலப்பாட அறிவை சோதிக்க, நேற்று முன்னறி தேர்வு நடந்தது.ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பங்கேற்ற இத்தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம்பெற்றன.
பாடத்திட்டம் சாராத, ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில், சுயமாக விடையளிக்கும் படியான கேள்விகளே இடம்பெற்றன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில்,''14 ஆயிரத்து 240 பேர் தேர்வு எழுதினர்.
அனைத்து பள்ளிகளிலும், கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தேர்வு முடிவுகள் வெளியானபின், மாணவர்களின் கற்றல் திறன் அறிந்து அதற்கேற்ப வழிநடத்தப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment