தட்டெழுத்துத் தேர்வுகள் குறுக்கிடுவதால் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: தேதியை மாற்றக் கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடத்தவுள்ள குரூப்-2 பிரதானத் தேர்வை, வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என தமிழ்நாடு தட்டெழுத்து-சுருக்கெழுத்து-கணினி பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சோம. சங்கர், தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: பல ஆண்டு காலமாக பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தட்டெழுத்துத் தேர்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.
அதன்படி, 2019 பிப்ரவரி 23, 24 ஆகிய தேதிகளில் தட்டெழுத்துத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
No comments:
Post a Comment
Please Comment