உலகம் முழுவதும் ஒரே கரன்சி சாத்தியமா? Can a single currency all over the world possible?உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பணம் சாத்தியமா, - ThulirKalvi Blogs

Latest

Search This Site

உலகம் முழுவதும் ஒரே கரன்சி சாத்தியமா? Can a single currency all over the world possible?உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பணம் சாத்தியமா,

உலகம் முழுவதும் ஒரே கரன்சி சாத்தியமா? Can a single currency all over the world possible? உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பணம் சாத்தியமா, ஒரு நாடு கரன்சி வெளியிடுவதில் தங்கத்தின் பங்கும் முக்கியமானது. ஒவ்வொரு நாடும் அந்த நாட்டில் உள்ள ரிசர்வ் வங்கியில் தங்கத்தை வைத்திருக்கும். வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தின் மதிப்புக்கு ஏற்றவாறுதான் அந்தந்த நாடு கரன்சிகளை வெளியிடுகிறது. 





வளர்ந்த நாடுகளில் தங்கத்தின் இருப்பு அதிகமாக இருக்கும். இதனால் அந்த நாட்டு கரன்சியின் மதிப்பும் அதிகமாக இருக்கும். வளரும் நாடுகளில் தங்கத்தின் இருப்பு குறைவாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு அந்த நாடுகளில் கரன்சியின் மதிப்பும் குறைவாக இருக்கும். உலக நாடுகள் அனைத்தும் தங்களிடம் உள்ள தங்கத்தின் இருப்பை வைத்து கரன்சியை வெளியிடுவதில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. 




ஆனால் அவை வெளியிடும் கரன்சியின் மதிப்புதான் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நாம் 71 ரூபாய் கொடுக்க வேண்டும். அந்த நாட்டு கரன்சியின் மதிப்பு அதிகம். இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு, கம்போடியாவில் 56 ரியல் கரன்சி கொடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு கிலோ ஆப்பிள் இந்தியாவில் 130 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு அமெரிக்க டாலராகக் கொடுத்தால் 2 டாலர்களுக்குள்தான் செலவாகும். அதுவே அமெரிக்காவில் நாம் ஒரு கிலோ ஆப்பிளை இந்திய ரூபாயில் வாங்கினால் 310 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். 



அமெரிக்கர்கள் 4 டாலர்கள் கொடுத்தால் போதும். இப்படிப் பெரிய அளவில் வேறுபாடு இருக்கும்போது உலகம் முழுவதும் ஒரே கரன்சி சாத்தியமில்லை. அதைப் பொருளாதாரத்தில் வலுவான நாடுகள் ஒப்புக்கொள்ளாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுகளில் 19 நாடுகள் இணைந்து யூரோ கரன்சியை அறிமுகம் செய்தன. அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கரன்சி யூரோதான். இந்த நாடுகளில் யூரோவை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். 




ஆனால், இப்போது பொருளாதாரத்தில் வலுவான நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்று யூரோவில் இருந்து விலக சில நாடுகள் விரும்புகின்றன. அதனால் ஒற்றை கரன்சி முறை வருவதற்கான சாத்தியம் இல்லை. 

No comments:

Post a Comment

Please Comment