இன்றைய அவசர உலகில் ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறை அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் ஒன்று. முன்பெல்லாம் உறவினருக்கோ, நண்பர்களுக்கோ அல்லது தமக்கே தேவை என்றாலும் ஒரு அக்கவுண்ட்லிருந்து மற்றொரு அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்ப நிறைய மெனக்கெட வேண்டும்.
வங்கிகளுக்கு நேரில் சென்று பணத்தை பிரித்து அனுப்பி வைக்க வேண்டும்.
ஆனால் அந்த தொல்லை இப்போது இல்லை. இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே எந்த அக்கவுண்டுக்கு வேண்டுமென்றாலும் பணத்தை அனுப்பி வைக்கலாம். பாதுகாப்பான ஆன்லைன் ட்ரான்சேக்ஷன் முறைகள் பல இப்போது அறிமுகப்படுத்தப்பட்டு விட்டன.
பணத்தை எப்படி சேமிக்கலாம் தெரியுமா? இப்படி தான்!
நெட் பேங்கிங் என்றாலே அதில் பணம் அனுப்ப இந்த மூன்று வசதிகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஐ.எம்.பி.எஸ் முறையில் நீங்கள் பணம் அனுப்பினால் வங்கிகள் உங்களிடன் வசூலிக்கும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?
1. எஸ்பிஐ வங்கி:
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 1 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 2 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன.
2. ஐசிஐசிஐ
ரூ 1000 வரை பணபரிமாற்றம் செய்பவர்களுக்கு எந்தவித கட்டண சேவையும் இல்லை. 10 ஆயிரம் ரூபாய் வரையிலான பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் வசூலிக்கிறது.10,000 முதல் 1 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 5 ரூபாய் + ஜி.எஸ்.டி தொகையை வங்கிகள் வசூலிக்கின்றன. 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை பணபரிமாற்றத்திற்கு 15 ரூபாய் + ஜி.எஸ்.டியோடு கட்டணம் நிர்ணிக்கப்பட்டுள்ளது.
துளிர்கல்விச் செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் SHARE செய்யுங்கள்.
நன்றி!!!
No comments:
Post a Comment
Please Comment