மத்திய அரசில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்
தேசிய நீர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 73 இளநிலை பொறியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Junior Engineer
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Accountant
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade-II
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.25,500 -81,100
வயதுவமர்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 10 நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடம் சுருக்கெழுத்தில் எழுதி அதை ஆங்கிலத்தில் 65 நிமிடத்திற்குள்ளும் ஹிந்தியில் 75 நிமிடத்திற்குள்ளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் 50 நிமிடத்திற்குள் இந்தியில் 65 நிமிடத்திற்குள்ளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 33
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 25 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் அனுபவமும், கூடுதல் தகுதி மற்றும் கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.650, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.450 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nwda.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://cdn.digialm.com/per/g01/pub/1258/EForms/NWDAFinalDetailedAdvertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைதி தேதி: 22.02.2019
No comments:
Post a Comment
Please Comment