தேசிய தகுதித் தேர்வு (நெட்) வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிய பாடத் திட்டத்தின் கீழ் இத் தேர்வு நடைபெறவுள்ளதாகத் தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அறிவித்துள்ளது.
பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும்.
வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும் இந்தத் தகுதித் தேர்வில், வரும் ஜூன் மாதத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
புதிய பாடத் திட்டத்தில் நெட் :
தற்போது நடைபெறவுள்ள இந்தத் நெட் தேர்வானது புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் எனவும், புதிய பாடத் திட்ட விவரங்களை www.ugcnetonline.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் தேசிய தேர்வுகள் முகமையகம் அறிவித்துள்ளது.
தேர்வு அட்டவணை :
இந்தத் தேர்வானது வரும் 2019 ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் முழுவதும் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு துவங்கப்படவுள்ளது. பதிவு செய்ய மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டானது மே 15-ஆம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
Please Comment