தமிழக மாணவர்களுக்கு 313.58 கோடி! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!தமிழக சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தர்.
* 2019-20இல் நெல் கொள்முதல் ஊக்கத்தொகைக்காக ரூ.180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாதாரண நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.1,800, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,830 வழங்கப்படும்.
* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கல்லூரி அமைக்கப்படும்.
* பள்ளிகளில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும். இதற்காக 313.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக ரூ 1362.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 150 கோடி செலவில் விபத்து காய சிகிச்சை பிரிவு உருவாக்கம்.
* மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் 111.24 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டுக்கு 959.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை,கோவை போன்ற மாநகரங்களில் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகரில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்படும்.
அதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது, பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட பற்றி முடிவு செய்யப்படயுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment