லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் இந்திய ஒருங்கிணைப்பாளராக அரசுப் பள்ளி ஆசிரியை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் இந்திய ஒருங்கிணைப்பாளராக அரசுப் பள்ளி ஆசிரியை!

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் இந்திய ஒருங்கிணைப்பாளராக அரசுப் பள்ளி ஆசிரியை!






செனாய் நகர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை கனகலட்சுமி. தமிழை மாணவர்களுக்கு எளிமையாகவும் சுவையாகவும் கற்பிக்கும் முறைகளைப் புதிது புதிகாக உருவாக்கி வருபவர். அதை சக ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். லண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS (School of Orietal and African Studies) கல்லூரியில் நிறுவப்படும் தமிழ்த்துறையின் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளராக அரசுப் பள்ளி ஆசிரியை கனகலட்சுமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான கடிதத்தை நேற்று அவருக்கு அனுப்பியிருந்தது. ஆசிரியை கனகலட்சுமியிடம் பேசினேன். ``இந்த வாய்ப்பு ரொம்ப சந்தோஷத்தையும் பொறுப்பையும் தருகிறது. 





என்னுடைய பணி என்பது, லண்டன் சென்று தமிழ் வளர்ச்சி சார்ந்த விஷயங்களை முன்னெடுக்கவும், தமிழ் மொழி கற்பித்தலில் ஆர்வமும் திறனும் உள்ள ஆசிரியர்களை அந்த அமைப்புக்கு ஒருங்கிணைக்கும் பணியைச் செய்ய வேண்டும். அடுத்து, அங்கு படிக்கும் மாணவர்களுக்கான ஆய்வுப் பணிக்கு வழிகாட்டுவது போன்ற பணிகள் இருக்கும்'' என்கிறார். தமிழ்நாட்டு அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் பெரும் அங்கீகாரம் இது.

No comments:

Post a Comment

Please Comment