பள்ளி மாணவர்களுக்கானதிருக்குறள் ஒப்பித்தல் போட்டி : மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம் Click HERE For Apply online - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பள்ளி மாணவர்களுக்கானதிருக்குறள் ஒப்பித்தல் போட்டி : மார்ச் 1 முதல் விண்ணப்பிக்கலாம் Click HERE For Apply online

🔹திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 22-ஆவது ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சியில் நடைபெறவுள்ளது. 




🔹இந்தப் போட்டிக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் தலைவர் பூவை பி.தயாபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 




 🔹திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 22-ஆவது ஆண்டு விழா திருச்சியில் வரும் மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டியில் 17 வயதுக்குள்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். 




🔹போட்டியில் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் 30 மாணவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மற்றும் விருது; முதல் 500 குறள்களை ஒப்பிக்கும் 110 மாணவர்களுக்கு தலா ரூ.500 பரிசாக வழங்கப்படும். மொத்தப் பரிசுத் தொகை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ஆகும். 



🔹ஏற்கெனவே விருது பெற்றவர்கள் மீண்டும் போட்டியில் பங்கேற்க இயலாது. பள்ளியிலிருந்து இடைநின்றவர்களும் இதில் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் கிடையாது. 



🔹தகுதியுடையவர்கள் வரும் மார்ச் 1 முதல் ஏப்.15-ஆம் தேதிக்குள் தமது சுய விவரக் குறிப்பை பூவை.பி.தயாபரன், திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை நிறுவனர்- தலைவர், எண் 25, திருக்குறள் தெரு, புள்ளம்பாடி, திருச்சி மாவட்டம்- 621 711, செல்லிடப்பேசி எண் 97865 86992 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


🔹 மேலும் thirumulanathan@gmail.co.in  என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். போட்டிகள் வரும் மே 1-இல் திருச்சிராப்பள்ளி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும். 




🔹 நடுவர்களாகப் பணியாற்ற விரும்பும் திருச்சி யைச் சார்ந்த திருக்குறள் ஆர்வலர்களும், தமிழாசிரியர்களும் தங்கள் இசைவினைத் தெரிவிக்கலாம். நடுவர்களுக்கு மதிப்பூதியம் உண்டு. போட்டிக்கான விண்ணப்ப படிவத்தை www.sites.google.com/site/thirumoolanathand என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

Please Comment