❇எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பித்தோர், தேர்வு மையங்களை, மார்ச், 12 வரை தேர்வு செய்யலாம்' என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
❇மத்திய சுகாதார துறையின் நேரடி கட்டுப்பாட்டில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை மற்றும் உயர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், 15 இடங்களில் செயல்படுகின்றன. இதில், எம்.பி.பி.எஸ்., மற்றும் முதுநிலை படிப்பில் சேர, எய்ம்ஸ் நடத்தும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
❇இந்த ஆண்டு எய்ம்ஸ் நுழைவு தேர்வு, மே, 25, 26ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதற்கான அடிப்படை தகவல், ஆன்லைன் பதிவு, ஜன., 3ல் முடிந்தது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டோர், தேர்வு எழுதும் மையத்தை, தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பதிவு, நேற்று துவங்கியது.
❇மார்ச், 3 வரை பதிவுகளை மேற்கொள்ளலாம்.கடைசி நேர ஆன்லைன் பிரச்னையை தவிர்க்க, முன்கூட்டியே பதிவுகளை முடிக்குமாறு, எய்ம்ஸ் தேர்வு கமிட்டி தெரிவித்து உள்ளது. அதேபோல, விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய, தனி குறியீட்டு எண்ணை, இதுவரை பெறாதவர்களுக்கும், கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
❇இதன்படி, இன்று முதல் மார்ச், 12க்குள், தனி குறியீட்டு எண்ணை உருவாக்கி, பதிவை தொடரலாம்.இந்நிலையில், ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ள முடியாத வகையில், எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான இணையதளம், தொழில்நுட்ப சிக்கலால், அவ்வப்போது முடங்குவதாக, மாணவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment
Please Comment