பொள்ளாச்சி, பிப்.15: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வு வரும் 21ம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு மொத்தம் 73 மையங்களில் நடப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, சுயநிதி பள்ளி, நகராட்சி பள்ளி, மெட்ரிக் பள்ளி உள்பட சுமார் 99 பள்ளிகள் 10ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 8 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்த பொதுத்தேர்வு துவங்குவதற்கு, முன்னதாக மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் மற்றும் தொழில்பாட பிரிவுக்கான செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு துவங்கப்பட உள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்குண்டான செய்முறை தேர்வு,
வரும் 21ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி வரை என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக கல்வி மாவட்டத்தில் மொத்தம் 73 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில். 10ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் தனிதேர்வாளர்களுக்கும் செய்முறை தேர்வு, நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி (மாணவிகள்) ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி (மாணவர்கள்) ஆகிய இரண்டு மையங்களில் நடக்க உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
Please Comment