🔵அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔵சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ரஞ்சித்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை புரிவதைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் பயோ மெட்ரிக் முறையை முழுமையாக அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
🔵கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லை.
No comments:
Post a Comment
Please Comment