புதுச்சேரி மாநிலத்தில் 6,294 மாணவர்கள்; 6,716 மாணவிகள் என 13,010 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் ௨ தேர்வினை எழுத உள்ளனர்.பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 19-ந்தேதி தேர்வு முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
புதுமைபிளஸ் 2 பொதுத் தேர்வில் பொதுவாக தமிழ், ஆங்கிலம் 4 தாள்களை எழுத வேண்டி இருக்கும். இந்தாண்டு தமிழ், ஆங்கில பாடங்களை 2 தாள்களாக மாற்றி,8 தேர்வுகள் எழுதிய மாணவர்கள் இனி 6 தேர்வுகள் எழுதினால் போதும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.600 மதிப்பெண் கடந்த காலங்களில் 3 நாட்கள் இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்பட்டது. இப்போது 2 நாட்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண் என்று 1,200 மதிப்பெண்கள் வகுத்து இருந்தது. ஆனால் இந்த முறை 100 மதிப்பெண் என்ற முறையில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண் என்று கணக்கிடப்பட்டுள்ளது.87.32 சதவீத தேர்ச்சிகடந்தாண்டு நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வினை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பகுதியை சேர்ந்த 6987 மாணவர்களும், 8088 மாணவிகள் என மொத்தம் 15075 மாணவர்கள் எழுதினர்.
இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 13,163 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதில் மாணவர்கள் -5842 பேர்;மாணவிகள்- 7321 ஆவார்.13,010 மாணவர்கள்இந்தாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலை பள்ளி கல்வித் துறை புதுச்சேரியில் இறுதி செய்து வருகிறது. இதன்படி புதுச்சேரியில் 6,294 மாணவர்கள்; 6,716 மாணவிகள் என 13,010 மாணவர்கள் இந்தாண்டு பிளஸ் தேர்வினை எழுத உள்ளனர். இவர்களில் 5,487 மாணவர்கள் அரசு பள்ளிகளையும், 7,523 மாணவர்கள் தனியார் பள்ளிகளை சேர்ந்தவர் களாவர்.பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக கடந்த கல்வியாண்டு பள்ளி கல்வித் துறை மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தது.
இந்தாண்டு இதைவிட அதிக தேர்ச்சி கொடுக்க அனைத்து பள்ளிகளும் பள்ளி மாணவர்களுக்கு கோச்சிங் கொடுத்து தயார்ப்படுத்தி உள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 83.61சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 90.52சதவீதமாகவும் இருந்தது. பல ஆண்டுகளாக மாணவர்களை விட மாணவிகளே தொடர்ந்து அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
இந்தாண்டாவது மாணவிகளை மாணவர்கள் முந்துவார்களா அல்லது மீண்டும் சறுக்குவார்களாஎன எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
No comments:
Post a Comment
Please Comment