ஜேஇஇ மெயின் 2ம் கட்ட தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் Apply Online நாடு முழுவதும் ஐஐடி, ஐஐஎஸ்சிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களின் மாணவர் சேர்க்கைக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு முதல்கட்ட ஜேஇஇ தேர்வு முதல் தாள் தேர்வு ஜனவரி 19ம் தேதியும், ஜேஇஇ இரண்டாம் தாள் தேர்வு ஜனவரி 31ம் தேதியும் நடந்தது. அந்த தேர்வை நாடு முழுவதும் இருந்து 8,74,469 பேர் எழுதினர். இந்நிலையில் 2ம் கட்ட ஜேஇஇ தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் நேற்று தொடங்கியது. மார்ச் 8ம் தேதி வரை மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி வெளியிட்ட அறிவிப்பில் www.nta.ac.in மற்றும் www.jeemain.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
இரு தேர்வுகளில் அதிகபட்ச மதிப்பெண் மாணவரின் மதிப்பெண்ணாக கருதப்படும். இதில் தேர்ச்சியடையும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதலாம். மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் ஐஐடி, ஐஐஎஸ்சி மாணவர் சேர்க்கை நடைபெறும்
No comments:
Post a Comment
Please Comment