வாட்ஸ் ஆப் அழைப்புகளையும் ரெக்கார்டு செய்யலாம்.!You can also record WhatsAppcalls. - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வாட்ஸ் ஆப் அழைப்புகளையும் ரெக்கார்டு செய்யலாம்.!You can also record WhatsAppcalls.

வாட்ஸ் ஆப் அழைப்புகளையும் ரெக்கார்டு செய்யலாம்.!!You can also record WhatsAppcalls.வாட்ஸ் ஆப் மூலம் எழுத்து வடிவ தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்ற நிலை மாறிவிட்டது. வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசும் வசதியும் தற்போது மிக பிரபலமடைந்து வருகிறது. செல்போன் அழைப்புகள் மூலம் பேசுவதை விட வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் பேசுவது எளிமையாகவும், வசதியாகவும் இருக்கிறது.
ஒரு பத்திரிக்கையாளராக போன்களில் பேசும் உரையாடல்களை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக ஒருவரை போன் அழைப்புகள் மூலம் நேர்கானல் செய்யும் போது அந்த உரையாடல்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. அதேபோல் வாட்ஸ் ஆப் மூலம் பேசப்படும் உரையாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது என்பது இயலாத காரியமாக இருந்து உள்ளது. இதற்காக தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்டும் எளிமையான வழிமுறைகள் கிடைக்கவில்லை. அழைப்புகளை பதிவு செய்ய ஹார்டுவேரையும் வரையறையும், சாப்ட்வேரில் கட்டுப்பாடுகள் பல உள்ளன.
வாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய
வாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய விரும்பினால் அதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராயடு மற்றும் ஐஓஎஸ் போன்களில் வாட்ஸ் ஆப் கால்களை பதிவு செய்ய 2 வழிமுறைகள் உள்ளது. இதுவும் சமயங்களில் இயலாமல் போகலாம். ஆனால் குறிப்பிட்ட சில மாடல்களில் மட்டுமே இது சாத்தியமாகும். வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வதற்கு முன்பு எதிர் முனையில் உள்ள நபரிடம் இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அழைப்புகளை பதிவு செய்ய
வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்ய மேக் (எம்ஏசி) மற்றும் ஐ போன் கட்டாயமாகும். பெரும்பாலானவர்களிடம் ஐ போன் என்பது அவர்களது முதன்மை போனாக இருக்காது. அதனால் இரண்டாவது போன் தேவைப்படும். அந்த செல்போன் வாட்ஸ் ஆப் குழு அழைப்புகளை செயலியை ஏற்கும் செல்போனாக இருக்க வேண்டும். அதில் தான் உங்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கு இருக்க வேண்டும்.

இதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
1.உங்களது ஐ போனை மேக்குடன் இலக்கு ரக கேபிள் மூலம் இணைக்க வேண்டும்.
2. பின்னர் ஐ போனில் 'டிரஸ்ட் திஸ் கம்ப்யூட்டர்' என்பதை தேர்வு செய்ய வேண்டும். முதன் முறை இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் இதை செய்ய வேண்டும்.
3. மேக்கில் 'குயிக் டைம்' என்பதை திறக்க வேண்டும்.
4. ஃபைல் என்ற ஆப்ஷனில் 'நியூ ஆடியோ ரெக்கார்டிங்' என்பதை தேர்வு செய்யவும்.
5. குயிக் டைம் பகுதியில் உள்ள ரெக்கார்டு பட்டனில் கீழ் நோக்கும் அம்புகுறியை தேர்வு செய்து, ஐ போனையும் தேர்வு செய்ய வேண்டும்.
6. குயிக் டைமில் உள்ள ரெக்கார்டு பட்டனை அழுத்த வேண்டும்.
7. ஐ போனை பயன்படுத்தி வாட்ஸ் ஆப் மூலம் அழைப்பை தொடங்க வேண்டும்.
8. ஒரு முறை இணைக்கப்பட்டவுடன், 'ஆட் யூசர்' என்ற ஐகானை அழுத்த வேண்டும். அடுத்து நீங்கள் அழைக்க வேண்டிய நபரை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் அந்த நபரோடு நீங்கள் பேசும் அனைத்து உரையாடல்களும் பதிவாக தொடங்கிவிடும்.
9. உரையாடல் முடிந்தவுடன் உடனடியாக அழைப்பை துண்டித்துவிட வேண்டும்.
10. பின்னர் குயிக் டைமில் பதிவாவதை நிறுத்திவிட்டு, பதிவை மேக்கில் சேமித்துவிட வேண்டும்.

ரகசியமாக பதிவு செய்ய முடியாது
You can also record WhatsAppcalls.
வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள அனைவருக்கும் பதிவு செய்யப்படுவது தெரியும். வாட்ஸ் ஆப் அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்ய முடியாது.
ஆந்திராய்டு போன் மூலம் 'க்யூப் கால் ரெக்கார்டர்' மூலம் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது குறித்து பார்ப்போம்.

க்யூப் கால் ரெக்கார்டர்
இந்த பதிவு செய்யப்படும் வசதி குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே சாத்தியமாகும் என்று நாங்கள் ஏற்கனவே கூறியதை மறந்துவிட வேண்டாம். க்யூப் கால் ரெக்கார்டரில் விஓஐபி (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரொடகால்) என்ற பதிவு வசதி உள்ளது. இதுவும் குறிப்பிட்டYou can also record WhatsAppcalls. மாடல் போன்களில் மட்டுமே வேலை செய்யும். இந்த பட்டியல் ஆப்பின் ப்ளே ஸ்டோரில் கூகுல் ஷீட் வடிவத்தில் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் ஒரு பரிசோதனை செய்தோம். இந்த பட்டியலில் இருந்த சாம்சங் கேலக்சி நோட்8 என்ற செல்போனில் வாட்ஸ் ஆப் அழைப்புகள் பதிவு செய்ய முடியாமல் போனது.

அதனால் அந்த பட்டியலில் உங்களது போன் இடம்பெற்றிருந்தால் இதை முயற்சி செய்து பார்க்கவும்.
1. க்யூப் கால் ரெக்கார்டரை உங்களது வாட்ஸ் ஆப் கணக்கும் இருக்கும் போனில் பதவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. க்யூப் கால் ரெக்கார்டரை ஓப்பன் செய்து அதில் வாட்ஸ் ஆப் முறைக்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.
3. பின்னர் பேச வேண்டிய நபரை அழைக்கவும்.You can also record WhatsAppcalls.
4. பேசும் போது பதிவாகும் தகவலை க்யூப் கால் ரெக்கார்டர் காண்பித்தால் உங்களது உரையாடல் பதிவு செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
5.ஆனால் 'எரர்' காண்பித்தால் க்யூப் கால் ரெக்கார்டர் ஆப்பின் செட்டிங்ஸில் 'ஃபோர்ஸ் விஓஐபி கால் அஸ் வாய்ஸ் கால்' என்று ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
6. இதன் பின்னர் திரும்ப அழைத்து பேசும் போது க்யூப் கால் ரெக்கார்டரில் பதிவாவதற்கான அறிகுறி தெரிகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
7. இதன் பின்னரும் எரர் வந்தால் உங்களது போனில் இந்த வசதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.

ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ் ஆப் அழைப்புகளை செய்ய மாற்று வழி
ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு 3வது வாய்ப்பாக இது இருக்கும். 'ரூட் யுவர் டிவைஸ்' என்ற முறையை பின்பற்ற வேண்டும். இதை செய்தால் உங்களது போனின் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பாளரின் அப்டேட் வசதியில் பாதிப்பு ஏற்படலாம். அதனால் எச்சரிக்கையாக இதை செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் துணிந்தால் செயல்படுத்தலாம்.You can also record WhatsAppcalls. இதற்கு எஸ்சிஆர் ஸ்கிரீட் ரெக்கார்டர் செயலியை 'எக்ஸ்டிஏ' மூலம் முயற்சி செய்ய வேண்டும்.

எளிதான காரியமல்ல
நாங்கள் ஏற்கனவே கூறியது போல் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எனினும் மேற்கண்ட முறைகள் எதுவும் சாத்தியப்படவில்லை என்றால் வாட்ஸ் ஆப் அழைப்புகளை 'லவுட் ஸ்பீக்கர்' மூலம் செயல்படுத்தி இரண்டாவதாக பதிவு செய்யும் வசதியுள்ள வேறு ஒரு போன் மூலம் அமைதியான ஒரு அறையில் இருந்து பதிவு செய்து கொள்ளலாம். இது தான் செலவு குறைவான முறையில் வாட்ஸ் ஆப் அழைப்புகளை பதிவு செய்து கொள்ளும் You can also record WhatsAppcalls.முறையாகும். முயற்சி செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment

Please Comment