தமிழக பட்ஜெட் 2019-20: பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்க்கல்வித்துறையின் முக்கிய அம்சங்கள்!
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.4581.21 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.28,757 கோடி நிதியில், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.5000 தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019-20ம் ஆண்டில் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1362 கோடி ஒதுக்கீடு. இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு. நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்காக ரூ.2,791 கோடி ஒதுக்கீடு.
பள்ளிகளில் 3 முதல் 8ம் வகுப்பு வரை பெண்குழந்தைகள் கல்வி ஊக்கத் திட்டத்திற்கு ரூ.47.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்ந்துள்ளதாகவும், பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔰உயர்க்கல்வித்துறை
அதேபோல், உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.4581.21 கோடி நிதியில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச தரத்தில் கற்பித்தலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழக திறன் மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்விச் செலவை திரும்ப வழங்கும் திட்டத்துக்கு 460.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு ரூ.250 கோடி நல்கைத் தொகை வழங்கப்படும்.
5 மாவட்ட தலைநகரங்களில் அரசு தனியார் உதவியுடன் 10,000 பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment