மக்களவை தேர்தல் எதிரொலி : தமிழகத்தில் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவு தமிழகத்தில் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளது.
தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன.
கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும்.
காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து அதற்கான அறிக்கையை பிப்.,15- ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே பணியிட மாற்றம் செய்த அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
Please Comment