பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு நாளை ஹால் டிக்கெட்

பிளஸ் 2 தனித்தேர்வர்கள் நாளை (22ம் தேதி) முதல்இணையதளம் வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது குறித்து, பள்ளி கல்வி இயக்கக இணை இயக்குனர் குப்புசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:



வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்கள் நாளை (22ம் தேதி) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம், ஹால் டிக்கெட்டினைபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று முதலில், ஹால் டிக்கெட் டவுன்லோடு என்ற வாசகத்தினை கிளிக் செய்தால்தோன்றும் பக்கத்தில், உள்ள ''HIGHER SECONDARY SECOND YEAR EXAM MARCH 2019 - PRIVATE CANDIDATE - HALL TICKET PRINT OUT'' என்ற வாசகத்தினை கிளிக் செய்தால்தோன்றும் பக்கத்தில், 



தங்களது விண்ணப்ப எண்,பிறந்த தேதியினை பதிவு செய்தால், அவர்களுடைய ஹால் டிக்கெட் திரையில் தோன்றும். அதனை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.பழைய பாடத்தின் படி (மொத்தம் 1200 மதிபெண்கள்) தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் மட்டும் மொழி பாடங்களில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.




உரிய ஹால் டிக்கெட் இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மார்ச் 2019 பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Please Comment