ஓர் நிறுத்த மையம் (ஒன் ஸ்டாப் சென்டர்) திட்டத்தில், தர்மபுரி மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டில் அட்மினிஸ்ட்ரேட்டர், சீனியர் கவுன்சிலர், கேஸ் ஒர்க்கர், ஐடி பணியாளர், மல்டிபர்பஸ் ஹெல்ப்பர், செக்யூரிட்டி மற்றும் டிரைவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன்படி அட்மினிஸ்ட்ரேட்டர் பதவிக்கு ₹30 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் சமூகவியல் முதுகலை பட்டத்துடன் 4 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். சீனியர் கவுன்சிலர் பதவிக்கு ₹20 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர் சமூகவியல் முதுகலை பட்டத்துடன், 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். கேஸ்ஒர்க்கர் பணியிடத்திற்கு மாதம் ₹12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பதாரர் சமூகவியலில் முதுகலை பட்டமும், 1 ஆண்டு அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். ஐடி பணியாளர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக ₹18 ஆயிரம் வழங்கப்படும்.
கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் இளநிலை பட்டம் பெற்ற பெண்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும். மல்டிபர்பஸ் ஹெல்ப்பர் பணியிடத்திற்கு, மாத சம்பளமாக ₹6,400 வழங்கப்படும். விண்ணப்பதாரர் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன், சமையல் தெரிந்திருக்க வேண்டும். செக்யூரிட்டி மற்றும் டிரைவர் பணியிடத்திற்கு மாத சம்பளமாக ₹10 ஆயிரம் வழங்கப்படும். ஒரு அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அனைத்து சான்றிதழ் நகல்களிலும், சுய சான்றொப்பமிட்டு, சுயவிலாசமிட்ட அஞ்சல் உறையுடன், வரும் 27ம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், தர்மபுரி என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
Please Comment