பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கிடையாது என்ற நிலை இருந்து வந்தது. தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் 6 ஆம் வகுப்புக்கு நடுநிலைப்பள்ளிக்கு செல்வர்.
நடுநிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 9 ஆம் வகுப்புக்கு உயர்நிலைப்பள்ளிக்கு செல்வர்.
இந்த இரு வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு முறை கிடையாது. எனவே 6 மற்றும் 9ஆம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள் திறன் குறைவாக இருப்பதாக கருதப்பட்டு வந்தது. இதையடுத்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பள்ளியில் பொது தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனால் மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுச் செல்ல நேரிடலாம் என பல மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
தற்போது இந்த சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிச்சயம் என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் செல்வராஜ் கூறியது: மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கதக்கது. பிகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும். கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டாம் என மத்திய அரசு முன்பு கூறியது. இதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்து வந்தது.
ஒரு ஆய்வில் 2 ஆம் வகுப்பு புத்தகத்தை 5 ஆம் வகுப்பு மாணவனால் வாசிக்க இயலவில்லை எனவும், 5 ஆம் வகுப்பு புத்தகத்தை 8 ஆம் வகுப்பு மாணவனால் வாசிக்க இயலவில்லை என்பதும் தெரியவந்தது.
தற்போது 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் திறன் கூடுவதோடு, கற்கும் ஆர்வமும் அதிகரிக்கும். ஆசிரியர்களும் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாடங்களை போதிப்பர். பெற்றோர்களும், தங்களது குழந்தைகள் தேர்ச்சி பெற வேண்டும் என அக்கறை காட்டுவர். எனவே மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார். 🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment