உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு, ஓர் இனிமையான மருந்தாக இருக்கிறது தேன். இதனை தகுந்த வழிகளில் பயன்படுத்தி எளிதாக எடையைக் குறைக்கலாம்.
தவிர, இயற்கையான இனிப்புச் சுவைக் கொண்ட இது ரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைத்திருக்கும்.
சரி, இப்போது தேனை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பதைப் பார்ப்போம்.
ஜீரணத்திற்கு
உண்மையிலேயே தேன் உங்களது ஜீரணத்தை 'இம்ப்ரூவ்' செய்து, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. அதோடு எடை குறைவதற்கான மூலக்கூறுகள் இதில் அதிகமுள்ளன. ஒரு கப் வார்ம் வாட்டரில் தேன் கலந்து குடிப்பது, எடை குறையவும், ஜீரணத்திற்கும் உதவும்.
படுக்கைக்கு முன்
தினமும் தூங்கச் செல்லும்முன் 1 ஸ்பூன் தேன் சாப்பிடுங்கள்.
இது உங்களது லிவர் ஃபங்ஷனை தூண்டி விட்டு, எடையைக் குறைக்கிறது.
எலுமிச்சையுடன்
தேனுடன் எலுமிச்சை அல்லது பட்டை பொடி அல்லது வெறும் வார்ம் வாட்டர் இதில் ஏதாவது ஒன்றையோ அல்லது அனைத்தையும் மிக்ஸ் செய்தோ தினமும் குடித்துவர, உங்கள் உடலின் செயல்பாடுகள் தூண்டப்படும். அதோடு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பையும் எனெர்ஜியாக மாற்றும்.
குறிப்பு - இவற்றை உங்கள் உடல்நிலைக்கு ஏற்றவாறு மருத்துவர் பரிந்துரையுடன் முயற்சி செய்யவும்.
No comments:
Post a Comment
Please Comment