`வாடிக்கையாளர் கணக்கில் பணம் திருடு போனால் வங்கிதான் பொறுப்பு!' - கேரள உயர்நீதிமன்றம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

`வாடிக்கையாளர் கணக்கில் பணம் திருடு போனால் வங்கிதான் பொறுப்பு!' - கேரள உயர்நீதிமன்றம்

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடுபோனால் சம்பந்தப்பட்ட வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர் அம்மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். 





அந்த வழக்கில் தான், பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும், அதிலிருந்த தன்னுடைய 2,40,000 பணம் திருடப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட வங்கியின் மீது குற்றம்சாட்டியிருந்தார். மேலும், தன்னுடைய பணத்தை திருப்பித் தரவேண்டும் எனவும் அதில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் பாதிக்கப்பட்டவருக்கு பணத்தைக் கொடுக்க வேண்டும் என வங்கிக்கு உத்தரவிட்டது. 




 இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாரத ஸ்டேட் வங்கி கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `வாடிக்கையாளர்கள் நலனை பாதுகாப்பது வங்கியின் கடமை. பணம் தவறும் அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாதது வங்கியின் தவறு.அதற்கு வங்கியே பொறுப்பேற்க வேண்டும். வங்கிகள் தங்களின் பொறுப்புகளை தட்டிக்கழிக்க முடியாது. எஸ்.எம்.எஸ் அனுப்பி தெரியப்படுத்தினோம் என்றெல்லாம் கூறி வங்கிகள் தப்பித்துக்கொள்ள முடியாது. எனவே, வங்கிக் கணக்கில் பயனாளருக்குத் தெரியாமல் பணம் திருடு போனால் வங்கியே பொறுப்பு ஏற்க வேண்டும்' என்று கூறி, பணத்தை வழங்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

Please Comment