இன்றைய சூழ்நிலையில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்வதால் காலையில் அலுவலகம் போகிற அவசரத்தில் விரைவில் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் உதவியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
அதே நேரத்தில் இந்த உபகரணங்கள் மூலம் செய்யும் உணவுப்பொருட்களே சில நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
பொதுவாக குக்கரில் சாப்பாடு செய்வது சாதாரணமான ஒன்று தான். அதனால் உடல்பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகமாக உள்ளது. அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவீதம் மாவுச்சத்து குறைந்து விடும். மேலும் ரத்த சர்க்கரையின் அளவை அது உடனடியாக கூட்டாது என டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் குக்கரில் சமைக்கும்போது அந்த சத்துக்கள் சாப்பாட்டில் முழுமையாக இருந்து விடும்.
மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கப்படுவதில்லை.
அதனால் கலோரி குளுக்கோஸ் அளவு இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதேபோன்று சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் உள்ளது. மேலும் நார்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.
அது மட்டுமல்லாமல் அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது. அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே அது மிகவும் நல்லது.
பொதுவாக வேகமாக தயாரான சாப்பாட்டை இரண்டு மடங்கு எடுத்து கொண்டால் மட்டுமே வயிறு நிரம்பும்.
இப்படி வயிற்றுக்குள் உணவை திணிக்க திணிக்க பிரச்சினைகளும் அதிகமாகும். எனவே கூடுமானவரை குக்கர் சாதம் சாப்பிடாமல் கஞ்சி வடித்த சாப்பாட்டை சாப்பிடுவதால் பல நோய்கள் நம்மை நெருங்க விடாமல் வைத்து இருக்கும். அதனால் முடிந்த வரை குக்கரில் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதை தவிர்க்க மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment
Please Comment