வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரங்களை 'எமிஸ்' இணையதளத்தில் உடனே பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அரசு, அரசு உதவிப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என 1.7 லட்சம் பேர் வரை கலந்துகொண்டனர்.
அதில் 4,800-க்கும் அதிகமான ஆசிரியர்கள் மீது இடமாறுதல், பணியிடை நீக்கம் என துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. மேலும், ஆசிரியர்கள் பணிக்கு வராத நாட்களுக்கு சம்பள மும் பிடித்தம் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு திரும்பப்பெற வேண்டும் என அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோரை சந்தித்து ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் முழுவிவரங்களை 'எமிஸ்' இணைய தளத்தில் உடனே பதிவு செய்யபள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. சுற்றறிக்கைஇதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ''எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், கடந்த ஜனவரி 22 முதல் 30-ம்தேதி வரை நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, பள்ளிக்கு வராமல் இருந்த ஆசிரியர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் விவரம், எத்தனைநாட்கள் பணிக்கு வரவில்லை என்பன உட்பட முழு தகவல்களையும் குறிப்பிட வேண்டும்''என்று கூறப்பட்டுள்ளது.
விவரங்கள் சேகரிப்பு
இதையடுத்து மாவட்ட வாரியாக போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரங்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறைச் செயலரின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment