எம்.டி., எம்.எஸ்: மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் வாரியம் இன்று வெளியிட்டு உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதுபோல, மருத்துவ மேற்படிக்கும் நீட் தேர்வு மூலமே செய்யப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 2500 இடங்கள் உள்ளது.
இந்த மருத்துப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த (ஜனவரி) 6ம் தேதி நடைபெற்றது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் எம்.டி., எம்.எஸ். மேற்படிப்புகாக தேர்வு எழுதினார். தமிழகத்தில் 20 ஆயிரம் மருத்துவர்கள் நீட் தேர்வை எழுதியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை இந்திய தேசிய தேர்வுகள் வாரியம் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான முடிவுகளை இணையதளத்தில் பார்க்கலாம் என்று அறிவித்து உள்ளது.
எம்.டி., எம்.எஸ்., மேற்படிப்புக்கான தேர்வு முடிவுகளை காண கீழேஉள்ள இணையதளத்தை கிளிக் செய்யவும்.
www.natboard.edu.in
.எம்.எஸ்., M.D., M.S., MD, MS: Medical PG NEET Exam, Neet Exam, RESULTS RELEASED, எம்.டி, நீட் தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க முடியாது! மதுரை ஐகோர்ட்டு, மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது, ரிசல்ட்
🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment